"உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மக்களின் கவலையை போக்கி, மகத்தான தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
"உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Published on

சென்னை, 

தமிழ்நாடு அரசானது களத்தில் முதல்வர் திட்டத்தின் அடுத்த கட்டமாக, "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தை  அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை அறிவித்த பின்னர் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது,

இது மக்களிடம் செல் என்று சொன்ன பேரறிஞர் அண்ணாவின் கனவை நனவாக்கும் திட்டம் ஆகும். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும், ஒரு நாள் வட்ட அளவில் தங்கி ஆய்வில் ஈடுபட வேண்டும். அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் நலத்திட்டங்கள், சேவைகள் தங்கு தடையின்றி மக்களிடம் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும். நானும், அரசு இயந்திரமும் களத்திற்கு வருகிறோம், குறைகளை கேட்டு, மக்களின் கவலையை போக்கி, மகத்தான தமிழ்நாட்டை உருவாக்குவோம்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com