

சென்னை,
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய போலீஸ் சூப்பிரண்டை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் கே.மணிவாசன் வெளியிடட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருநெல்வேலி நகர (மேற்கு) துணை போலீஸ் கமிஷனர் அன்சுல் நாகர், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்படுகிறார். அந்த இடத்தில் இதற்கு முன்பு டாக்டர் ஆர்.ஸ்டாலின் இருந்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.