பராமரிப்பு பணிகளுக்காக பாம்பன் புதிய தூக்குப்பாலம் திறப்பு

2 மாதங்களுக்குப் பன் புதிய தூக்குப்பாலம் திறக்கப்பட்டதை பாம்பன் ரோடு பாலத்தில் நின்றபடி சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
பராமரிப்பு பணிகளுக்காக பாம்பன் புதிய தூக்குப்பாலம் திறப்பு
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்டு உள்ள புதிய ரெயில் பாலத்தில் தற்போது பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதனால் மதுரையில் இருந்து காலையில் ராமேசுவரம் புறப்படும் பாசஞ்சர் ரெயில் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. மண்டபம்-ராமேசுவரம் இடையே பகு தியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதிய தூக்குப்பாலம் நேற்று திறந்து ஆய்வு செய்யப்பட்டது. ரோடு பாலம் உயரத்திற்கு நேற்று காலை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக தூக்குப்பாலம் திறந்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது தூக்குப்பாலத்தின் 2 பகுதியிலும் உள்ள இரும்பு ரோப் கம்பி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பராமரிப்பு பணியில் ரெயில்வே பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

110 ஆண்டுகளை கடந்த பழைய தூக்குப்பாலத்தை வெல்டிங் செய்து உடைத்து அகற்றும் பணி நடந்து வருவதால் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தூக்குப்பாலம் திறக்கப்படாமல் இருந்த நிலையில் நேற்று ஆய்வுக்காக புதிய தூக்குப்பாலம் திறக்கப்பட்டதை பாம்பன் ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com