

சென்னை,
தமிழகத்துக்கு புதிதாக 4 ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது;
1) பாலக்காடு- பொள்ளாச்சி மெமு (மின்சாரப் பயணிகள் ரயில்கள்)
2) மயிலாடுதுறை- காரைக்குடி பயணிகள் இரயில்
3) போத்தனூர்- தன்பாத் அம்ரித் பாரத் விரைவு இரயில்
4) திருநெல்வேலி- மங்களூரு விரைவு இரயில், ஆகிய நான்கு புதிய இரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இதற்கு நன்றி தெரிவித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
“ரெயில்வேயின் வளர்ச்சி – புதிய இந்தியாவின் முன்னேற்றத்தின் அடையாளம்"
தமிழக மக்களின் நலனுக்காக புதிய ரயில் சேவைகள், கூடுதல் நிறுத்தங்கள் மற்றும் சேவை அதிகரிப்பை ஒப்புதல் அளித்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் மத்திய ரெயில்வேதுறை மந்திரி அஸ்வினி வைஸ்னவ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.