உறுதிகோட்டையில் புதிய மின்மாற்றி

உறுதிகோட்டையில் புதிய மின்மாற்றியை மாங்குடி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
உறுதிகோட்டையில் புதிய மின்மாற்றி
Published on

தேவகோட்டை

தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் உறுதிகோட்டை ஊராட்சியில் உறுதி கோட்டை, திட்டுக்கோட்டை மற்றும் குமாரவேலூர் ஆகிய 3 கிராமங்களில் குறைந்த மின்னழுத்தம் நிலவியது. இதையடுத்து அந்த ஊராட்சி மன்ற தலைவர் சுதா கணேசன், இதுகுறித்து அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். அதன்பேரில் அங்கு புதிய மின்மாற்றி(டிரான்ஸ்பார்மர்) அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு யூனியன் தலைவர் பிர்லாகணேசன் தலைமை தாங்கினார். காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி கலந்து கொண்டு மின்மாற்றியை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் சுதா கணேசன் முன்னிலை வகித்தார்.

விழாவில் சிவகங்கை கோட்ட செயற்பொறியாளர் முருகையன், உதவி செயற்பொறியாளர் அன்புநாதன், உதவி மின் பொறியாளர் ராஜாஜி, ஊராட்சி மன்ற உதவி தலைவர் ஆறுமுகம், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் பாப்பாங்கோட்டை பூமிநாதன், வழக்கறிஞர் சஞ்சய் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com