புதிய டிரான்ஸ்பார்மர் தொடக்க விழா

புதிய டிரான்ஸ்பார்மர் தொடக்க விழா நடந்தது. ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதிய டிரான்ஸ்பார்மர் தொடக்க விழா
Published on

ராணிப்பேட்டை,

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு எசையனூர் பகுதியில் குறைந்த மின்னழுத்தம் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்திருந்தனர். மேலும் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.

அதன் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு செயற்பொறியாளர் சந்திரன் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, உதவி செயற் பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் கணேசன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் எம்.எல்.ஏ., ஏ.எம். முனிரத்தினம் கலந்து கொண்டு புதிய டிரான்ஸ்பார்மரை இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com