பிரதமரின் திட்டத்தின் பெயரை பயன்படுத்தி தமிழகத்தில் புதிய வகை பண மோசடி - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

நிதி பரிமாற்றங்களுக்கு அதிகாரபூர்வ செயலிகள், இணையதளங்களை பயன்படுத்த வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தமிழகத்தில் புதியவகை பண மோசடி அரங்கேறி வருகிறது என்றும் இந்த மாதம் மட்டும் 7 புகார்கள் வந்துள்ளதாகவும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

பிரதம மந்திரியின் 'கிஷான் யோஜனா' என்ற திட்டத்தின் பெயரில் மோசடி செயலியை உருவாக்கி அதனை வாட்ஸ் அப் மூலம் மோசடி கும்பல் பகிர்கிறது. இந்த செயலியின் லிங்கை திறந்தால், பெயர், ஆதார் எண், பான் கார்டு, பிறந்த தேதி போன்ற முக்கிய தனிப்பட்ட தரவுகள் மோசடி கும்பல் கைவசம் சென்றுவிடுகிறது. இந்த தரவுகள் மூலம் யு.பி.ஐ. செயலிகளை பயன்படுத்தி மோசடி கும்பல் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறது. இந்த அதிநவீன மோசடி தாக்குதலால் நிதி இழப்பு மற்றும் மன உளைச்சலுக்கு மக்கள் உள்ளாகின்றனர். மேலும் அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் மீது தேவையில்லாத அச்சத்தையும் மோசடி கும்பல் உருவாக்கி உள்ளது.

இதுபோன்ற புதிய வகை மோசடியில் சிக்கி கொள்ளாமல் இருக்க, பொதுமக்கள் தங்கள் வங்கிக்கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். செல்போன்களில் தெரியாத இணைப்புகளை கிளிக் செய்யக்கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரபூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com