தமிழகத்தில் புதிய வக்பு சட்டம் அமல்படுத்தப்படாது - அமைச்சர் ஷாஜகான்

உமித் போர்ட்டலில் வக்பு சொத்துக்களை பதிவேற்றம் செய்வதில் பல சவால்கள் உள்ளன என்று அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிய வக்பு சட்டம் அமல்படுத்தப்படாது - அமைச்சர் ஷாஜகான்
Published on

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் புதிய வக்பு சட்டம் அமல்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் வக்பு திருத்தச் சட்டம் இதுவரை அமல்படுத்தவில்லை, இனியும் அமல்படுத்தப்படாது. இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்போம். புதிய வக்பு சட்டம் தொடர்பாக திமுக அரசு எடுத்திருந்த அதே எதிர்ப்பு கொள்கையையே தவெக அரசும் தொடர்ந்து பின்பற்றும்.

உமித் போர்ட்டலில் வக்பு சொத்துக்களை பதிவேற்றம் செய்வதில் பல சவால்கள் உள்ளன. அதிகாரிகள் இயன்றவரை அதில் பதிவேற்றம் செய்துள்ளனர். விடுபட்டவைகள் பதிவேற்றம் செய்ய உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். வக்ப் சட்டத்திருத்தத்தில் பல்வேறு ஷரத்துகளை எதிர்ப்போம். அதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com