பாஸ்போர்ட் தொடர்பாக காவல்துறையின் ஆட்சேபனை சான்றை பெற புதிய வழி - அதிகாரி தகவல்

பாஸ்போர்ட் தொடர்பாக காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்று வழங்குவதற்கான நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் தொடர்பாக காவல்துறையின் ஆட்சேபனை சான்றை பெற புதிய வழி - அதிகாரி தகவல்
Published on

சென்னை:

மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பாஸ்போர்ட் தொடர்பாக காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்று வழங்குவதற்கான நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்றை தபால் நிலையங்களில் இயங்கும் பாஸ்போர்ட் சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற முடியும். நாளை (புதன்கிழமை) முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்களில் வர உள்ள இந்த வசதி விண்ணப்பதாரர்களுக்கு வெளிநாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு உத்ரவாதம் தராது. காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்று குறித்த பிரச்சினைகளை தீர்க்க மட்டுமே உதவும் என்று சென்னை மண்டல துணை பாஸ்போர்ட் அதிகாரி எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com