முன்னாள் படைவீரர்கள் விரும்பிய பணியைப் பெற புதிய இணையதள வசதி அறிமுகம்!

தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகம் 1986-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
புதிய இணையதள வசதி
Published on: 

சென்னை,

முன்னாள் படைவீரர்கள், இணையதளம் வாயிலாக பதிவு செய்து, விரும்பிய பணியினை பெறுவதற்கு, மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த வலைதள செயலியை மனிதவள மேலாண்மைத் துறை (ம) முன்னாள் படை வீரர்கள் நலத் துறை அமைச்சர் சரத்குமார் தொடங்கி வைத்தார்

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

முன்னாள் படைவீரர்கள் கழகம்

முப்படையிலிருந்து ஓய்வு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மறு வேலை வாய்ப்பு வழங்கி, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகம் 1986-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கழகத்தின் மூலம் இந்நாள் வரை 60,000 நபர்கள் பயனடைந்துள்ளனர். தற்போது 2207 திட்டமைப்புகளில் 9786 பணியிடங்கள் உள்ளன.

வலைதள செயலி

தற்போது, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களின் நலன் கருதி இணையதளம், ஒருங்கிணைந்த வலைதள செயலியாக ரூபாய் 19 லட்சத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள், தங்களின் படை ஆவண நகல்களை பதிவு செய்யவும், தன் விவரங்கள் பதிவேற்றம் செய்யவும், தனித்திறன்களைத் தெரிவிக்கவும், விருப்பத்தேர்வின்படி விண்ணப்பிக்கவும், இணையவழி மூலம் பணி நியமனம் பெறவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தங்களுக்கான பிரத்தியேக வலைப்பக்கம் மூலமாக தங்களுக்குத் தேவையான பணியாளர்களின் கல்வி, வயது, திறன்கள் சார்ந்த தகுதிகள், பணியிடம், பணி நேரம், ஊதிய விவரம் மற்றும் பணியாளர் நியமித்தல் போன்ற பணியினை இலகுவாக கையாளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை மனிதவள மேலாண்மைத்துறை (ம) முன்னாள் படை வீரர்கள் நலத்துறை அமைச்சர் இன்று (06.11.2026) தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில், தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழக மேலாண்மை இயக்குநர் மா.சௌ. சங்கீதா, பொது மேலாளர் மு. மணிமேகலை, மற்றும் கழக உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X