புதுமுக நடிகைக்கு கொலை மிரட்டல்

சென்னை வடபழனி திருநகரை சேர்ந்தவர் தன்யா என்கிற ரவீயா பானு(வயது 26). புதுமுக சினிமா நடிகையான இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
புதுமுக நடிகைக்கு கொலை மிரட்டல்
Published on

சென்னை,

நான் இயக்குனர் கணேசன் இயக்கிய 18.5.2009 என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன். இலங்கையில் இசைபிரியா கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் தயாரிக்கப்பட்டது.

ஆனால் அந்த படம் வெளிவரவில்லை. தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறேன். இந்தநிலையில் என்னிடம் செல்போனில் பேசிய நபர் ஒருவர் கொலைமிரட்டல் விடுத்தார். 18.5.2009 படத்தில் நிர்வாணமாக, கேவலமாக நடித்து உள்ளாய். உன்னை தொலைத்து விடுவேன் என்று பயமுறுத்தினார்.

நானும், எனது தாயாரும் தனியாக வசிக்கிறோம். இதுதொடர்பாக விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்த சைபர் க்ரைம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com