

சென்னை,
தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த 4 ஆண்டுகளுக்குமேல் தமிழகத்தின் கவர்னராக செயல்பட்டு வந்த ஆர்.என்.ரவியை கடந்த 5ம் தேதி மேற்கு வங்காள கவர்னராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
மேலும், கேரள கவர்னாக செயல்பட்டு வரும் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகருக்கு தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி இன்று தமிழகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் ஆர்.என்.ரவி மேற்கு வங்காளம் புறப்பட்டு சென்றார்.
மேற்கு வங்காளம் செல்லும் ஆர்.என்.ரவி அம்மாநில கவர்னராக நாளை பதவியேற்க உள்ளார். கொல்கத்தா ஐகோட்டு நீதிபதி ஆர்.என்.ரவிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.