காட்டாங்கொளத்தூரில் புதியதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல்

காட்டாங்கொளத்தூரில் புதியதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னலை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
காட்டாங்கொளத்தூரில் புதியதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல்
Published on

காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலை 8 வழி சாலையாக அகலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பொதுமக்கள் சாலையை கடக்கும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலர் படுகாயம் அடைந்தும் ஒரு சிலர் உயிரிழந்து உள்ளனர். எனவே இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஜி.எஸ்.டி. சாலையை எளிதாக கடப்பதற்கு காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மறைமலைநகர் நகராட்சியின் 6 மற்றும் 7-வது வார்டு நகர மன்ற உறுப்பினர்கள் இருவரும் சேர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் புதிதாக போக்குவரத்து சிக்னலை அமைத்து கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மறைமலைநகர் நகர மன்ற தலைவர் ஜெ.சண்முகம் தலைமை தாங்கினார். நகர மன்ற உறுப்பினர்கள் தேவி கோகுலகிருஷ்ணன், காயத்திரி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு போக்குவரத்து சிக்னலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com