தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை

பட்டுக்கோட்டை அருகே தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டா.
தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை
Published on

திருச்சிற்றம்பலம்;

பட்டுக்கோட்டையை அடுத்துள்ள பண்ணவயல் கிராமத்தை சேர்ந்தவர் சின்னையன். இவருடைய மகன் மீனாட்சிசுந்தரம்(வயது33). விவசாயி. இவருக்கும் பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு கிராமத்தை சேர்ந்த அந்தோணி மகள் சினேகாவுக்கும்(20) கடந்த மாதம் திருமணம் நடந்தது. சம்பவத்தன்று கோவிலுக்கு செல்ல வேண்டும் என சினேகாவிடம் மீனாட்சி சுந்தரம் கூறிவிட்டு குளிக்க சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்த போது சினேகா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு சினேகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சினேகாவுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com