மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்துஊராட்சி துணைத்தலைவர் சாவு

ஒரத்தநாடு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ஊராட்சி துணைத்தலைவர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்துஊராட்சி துணைத்தலைவர் சாவு
Published on

ஓரத்தநாடு,:

ஊராட்சி துணை தலைவர்

ஒரத்தநாட்டை அடுத்துள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் துணைவன் (வயது55). இவர் ஆம்பலாப்பட்டு தெற்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு துணைவன், மோட்டார் சைக்கிளில் சோமன் தெரு அருகே சன்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தடுமாறி கீழே விழுந்தார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதில் படுகாயம் அடைந்தவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி துணைவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com