கொடைக்கானல் : சுற்றுலா பயணிகளை கவரும் லில்லியம் மலர்கள்..!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் மே 24 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
கொடைக்கானல் : சுற்றுலா பயணிகளை கவரும் லில்லியம் மலர்கள்..!
Published on

கொடைக்கானல்  ,

''மலைகளின் இளவரசி', 'கோடை வாசஸ்தலம்' என்றெல்லாம் வர்ணிக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வருகை தருகின்றனர். மேலும் கோடைகாலத்தில் இங்கு நிலவும் சீதோஷ்ண சூழலை அனுபவிக்க அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். மேலும் கோடைகால குளு, குளு சீசனையொட்டி மலர் கண்காட்சி நடத்தப்படும்

இதனால் நெதர்லாந்த்தில் இருந்து வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்ட லில்லியம் மலர் பூத்துக்குலுங்குகிறது .லில்லியம் மலர் வெள்ளை, சிவப்பு, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு நிறம், என வண்ணங்களில் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்குவதை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து ,மலர்களோடு தங்களை புகைப்படம் எடுத்து வருகின்றனர் .

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் மே 24 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com