எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மருத்துவ செலவு தொடர்பான செய்தி தவறான செய்தி - மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மருத்துவ செலவு தொடர்பான செய்தி தவறான செய்தி என மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மருத்துவ செலவு தொடர்பான செய்தி தவறான செய்தி - மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
Published on

சென்னை

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மருத்துவ செலவு தொடர்பாக வாட்ஸ்அப் மூலம் பரவும் தவறான செய்தி மிகவும் வருத்தமளிப்பதாக, மருத்துவமனை நிர்வாகத்தின் தீபா வெங்கட் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை நிர்வாகத்தின் தீபா வெங்கட் வெளியிட்ட அறிக்கையில், மறைந்த எஸ்பிபி குடும்பத்தினருக்கு மருத்துவமனை இரண்டு வாரங்களுக்கு முன்பு மேலும் பணம் செலுத்தத் தேவையில்லை என்று தெரிவித்ததாக கூறியுள்ளார். இந்த மருத்துவமனை மிகச் சிறந்த சிகிச்சையை அளித்துள்ளதாக கூறியுள்ள அவர்,

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தங்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்றும் தெரிவித்துள்ளார். மருத்துவ செலவு தெடர்பாக பரவும் செய்தி முற்றிலும் தவறானது மற்றும் இதை மேலும் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com