

சென்னை,
ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
வேலைநிறுத்தம் இன்று 2-வது நாளாக நீடித்து வரும் நிலையில் முழு அளவில் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது,
தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதில் எந்த இடையூறும் இல்லை. தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து பிடிவாதத்தில் இருக்கிறார்கள். போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் இன்று பிற்பகலுக்கு பிறகு கிடைக்கும் தீர்ப்பை பொறுத்து மேல் நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.