என்ஐஏ இயக்குனர் தின்கர் குப்தா டிஜிபி சைலேந்திர பாபுவுடன் சந்திப்பு

தின்கர் குப்தா, தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் என கூறப்படுகிறது.
என்ஐஏ இயக்குனர் தின்கர் குப்தா டிஜிபி சைலேந்திர பாபுவுடன் சந்திப்பு
Published on

சென்னை,

தேசிய புலனாய் முகமையின்(என்.ஐ.ஏ.) இயக்குனர் தினகர் குப்தா சென்னை வந்துள்ளார்.தென்னிந்தியாவில், கோவை சிலிண்டர் வெடிப்பு, மங்களூர் குக்கர் வெடி குண்டு வெடிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில் அவர் சென்னை வந்துள்ளார்.

பின்னர் தின்கர் குப்தா, தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் என கூறப்படுகிறது.

கோவை குண்டுவெடிப்பு சம்பவம், மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com