தமிழகத்தின் மூன்று இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட 3 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழகத்தின் மூன்று இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை
Published on

தமிழகத்தின் மூன்று இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட 3 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 20 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கேரளாவில் பதிவான வழக்கு ஒன்று தொடர்பாக கொச்சின் மண்டல அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திடீர் சோதனை எதற்காக என்ற விவரம் வெளியாகவில்லை. சோதனை முடிவுக்கு பிறகே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ,எது தொடர்பான வழக்கு என்பது பற்றிய முழு தகவல்களும் வெளியிடப்படும் என்று என்.ஐ.ஏ வட்டாரங்கள் கூறுகின்றன.

கேரளாவில் ஏதேனும் மாவோயிஸ்ட் தொடர்பான வழக்கா? அல்லது பயங்கரவாதம் தொடர்பான வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறுகிறதா? என்று தெரியவில்லை. இன்று காலை முதலே நீடித்து வரும் என்.ஐ.ஏ சோதனையால் திருச்சி, விருதுநகர் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com