தூத்துக்குடியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை; வடமாநில இளைஞர் கைது

கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞரிடம் என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை; வடமாநில இளைஞர் கைது
Published on

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு, பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு, நிதி திரட்டுதல் உள்ளிட்டவை தொடர்பாக கிடைத்த ரகசிய தகவல்கள் அடிப்படையில் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் 22 இடங்களில் இன்று தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அப்பகுதியில் வசித்து வந்த வடமாநில சேர்ந்த இளைஞனை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். அவர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞரிடம் என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com