நிச்சயதார்த்தம் முடிந்த 2 நாட்களில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை - போலீசார் விசாரணை

உறவினர்கள் பார்த்த பெண்ணுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாலிபருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on: 

செங்கல்பட்டு,

திருமண நிச்சயதார்த்தம் முடிந்த 2 நாட்களில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

நிச்சயதார்த்தம்

செங்கல்பட்டு மாவட்டம், வையாவூர், தர்மநாயக்கன்பட்டறை, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் செல்வரத்தினம் (26 வயது). இவர், சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு உறவினர்கள் பார்த்த பெண்ணுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை செங்கல்பட்டு மார்க்கமாக திருப்பதி நோக்கிச் சென்ற பயணிகள் ரெயில் காஞ்சிபுரம் ரெயில் நிலையம் அருகே வந்தபோது, செல்வரத்தினம் திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு ரெயில்வே போலீசார், செல்வரத்தினத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற 2 நாட்களில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com