புழல் சிறையில் காவலரை தாக்கிய நைஜீரிய பெண் கைதி; அதிர்ச்சி சம்பவம்


புழல் சிறையில் காவலரை தாக்கிய நைஜீரிய பெண் கைதி; அதிர்ச்சி சம்பவம்
x

வாக்குவாதம் முற்றிய நிலையில் சிறை காவலர் சரஸ்வதியை கைதி மோனிகா தாக்கினார்.

சென்னை

நைஜீரியா நாட்டை சேர்ந்த பெண் மோனிகா குற்றவழக்கில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று சிறையில் வீடியோ கான்பிரென்சிங் இல்லை எனக்கூறி சிறை காவலர் சரஸ்வதியிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் சிறை காவலர் சரஸ்வதியை கைதி மோனிகா தாக்கினார். இதில் காயமடைந்த சரஸ்வதியை மீட்ட சக காவலர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story