தமிழகத்தில் இரவு ஊரடங்கு..? ஆலோசனைக்கு பின் முடிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் உடனான ஆலோசனைக்கு பின் முதல்-அமைச்சர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இரவு ஊரடங்கு..? ஆலோசனைக்கு பின் முடிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

சென்னை,

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் புதிய தரவு அலகு மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி சார்பில் சிறப்பு 'டேட்டா செல்' என்ற செயலியும் தொடங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், புதிய தரவு மையத்தின் மூலம் தமிழ்நாட்டு சித்த மருத்துவர்கள், இந்திய மருத்துவ துறையுடன் தொடர்பு கொள்ள முடியும். சித்த மருத்துவ பல்கலைக்கழகத்துக்கான அலுவலகத்தை 10 நாட்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார். தமிழ்நாட்டில் அமையவுள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் வகையில் இந்த பணிகள் முடிக்கப்படும். இந்தியாவுக்கு முன்மாதிரியான பல்கலைக்கழகமாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் இருக்கும்.

மே மாதத்திற்கு பிறகு 77 இடங்களில் சித்த மருத்துவ கொரோனா மையங்கள் அமைக்கப்பட்டன. முதல் மற்றும் 2வது கொரோனா அலையின்போது இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு முழுவதும் 97 பேருக்கு ஓமைக்ரான் அறிகுறி உள்ளது. ஓமைக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஓமைக்ரான் மரபணு பகுப்பாய்வு முடிவுகள் மத்திய அரசிடம் இருந்து வருவது தாமதமாகிறது.

வரும் டிசம்பர் 31ம் தேதி இரவு நேர ஊரடங்கு விதிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் தலைமையில் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். அந்த ஆலோசனைக்கு பின்னர் முதல்-அமைச்சர் இதுதொடர்பாக முடிவெடுப்பார் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com