2 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரெயில் சேவை ரத்து


2 நாட்களுக்கு  இரவு நேர மின்சார ரெயில் சேவை ரத்து
x
தினத்தந்தி 4 Sept 2025 12:57 PM IST (Updated: 4 Sept 2025 1:11 PM IST)
t-max-icont-min-icon

திருப்பதி- காட்பாடி இடையிலான மெமு ரெயில்கள் இரு மார்க்கத்திலும் வரும் 5,7,8,9 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை,

சென்னை மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் முதல் கும்மிடிப்பூண்டி வரையிலான இரவு நேர மின்சார ரெயில் சேவை 5,7 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 12.30 மணி முதல் அதிகாலை 5.30 மணிவரையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. மேலும் 6,8 ஆகிய தேதிகளிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

இதனிடையே திருப்பதி- காட்பாடி இடையிலான மெமு ரயில்கள் இரு மார்க்கத்திலும் வருகின்ற 5,7,8,9 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சென்னை ரெயில்வே கோட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதியிலிருந்து காலை 7.35 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் மெமு பயணிகள் ரெயிலும் மறு மார்க்கத்தில். காட்பாடியில் இரவு 11.21 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் மெமு பயணிகள் ரெயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story