

நீலகிரி,
நீலகிரியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டத்தால் மக்கள் அச்சமடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் தீவன பற்றாக்குறை, குறைந்த எல்லைக்குள் அதிக வனவிலங்குகள் உள்பட பல்வேறு காரணங்களால் வனவிலங்குகள் ஊருக்குள் புகும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முத்த நாடு எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நேற்று இரவு காட்டு யானைகள் கூட்டம் நுழைந்தது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து, குட்டிகளுடன் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த யானைகளை மக்கள் சத்தம் போட்டு விரட்டியடித்தனர்.