நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில்: இன்று முதல் புத்தம் புது எல்.எச்.பி. பெட்டிகளுடன் இயக்கம்

நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் புத்தம் புது எல்.எச்.பி. பெட்டிகள் இன்று முதல் இணைக்கப்படுகிறது.
சென்னை
சென்னை,
சென்னை சென்டிரல் - மேட்டுப்பாளையம் இடையே தினமும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த ரெயிலின் பெட்டிகள் தற்போது புத்தம் புது எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. சிகப்பு நிறத்திலான இந்த பெட்டிகள் எடை குறைந்தது ஆகும். இதனால், கூடுதல் வேகத்தில் ரெயிலை இயக்க முடியும். பயணிகளுக்கும் புதிய அனுபவமாக இருக்கும்.
சென்னை சென்டிரலில் இருந்து இன்று (மார்ச் 3) இரவு புறப்படும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் எல்.எச்.பி. பெட்டிகளுடன் இயங்கும். அதேபோல், மறுமார்க்கத்தில், நாளை (மார்ச் 4) மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை சென்டிரல் வரும் ரெயிலில் எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
Related Tags :
Next Story






