நீலகிரி: மண் சரிவில் சிக்கி 3 வடமாநில தொழிலாளர்கள் பலி

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஓதனபட்டி பகுதியில் கட்டுமான பணிக்காக குழி தோண்டும் பணியில் 3 தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர்.
நீலகிரி: மண் சரிவில் சிக்கி 3 வடமாநில தொழிலாளர்கள் பலி
Published on

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஓதனபட்டி பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதற்காக குழி தோண்டும் பணியில் 3 தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் அந்த 3 தொழிலாளிகளும் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தொழிலாளிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மண் சரிவில் சிக்கிய கொல்கத்தா மாநிலத்தைச் சேர்ந்த தெழிலாளர்களான அப்துல் ரகுமான் (வயது 25), நசீர் உசேன்(30), உஸ்மான்(40) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மண்சரிந்து தொழிலாளிகள் 3 பேர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com