நீலகிரி: கெத்தை மலைப்பாதையில் 3 இடங்களில் நிலச்சரிவு - போக்குவரத்து பாதிப்பு

நிலச்சரிவு ஏற்பட்டுள்ள கெத்தை மலைப்பாதையை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி: கெத்தை மலைப்பாதையில் 3 இடங்களில் நிலச்சரிவு - போக்குவரத்து பாதிப்பு
நீலகிரி
Published on: 

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் கெத்தை மலைப்பாதையில் இன்று காலை 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

3 இடங்களில் மண் சரிவு

நீலகிரி மாவட்டத்தில் நிலவி வரும் தொடர் மழையால், மஞ்சூர் - கெத்தை - முள்ளி வழியாக கோவை செல்லும் மலைப்பாதையில் இன்று காலை அடுத்தடுத்து 3 இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து சாலையில் விழுந்தன.

போக்குவரத்து முழுமையாக துண்டிப்பு

சாலையில் மண் குவியல் விழுந்துள்ளதால், அந்த வழித்தடத்தில் வாகன போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மஞ்சூர் மற்றும் கோவை இடையே பயணிக்கும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சீரமைப்பு பணிகள் தீவிரம்

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த நெடுஞ்சாலை துறையினர், பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் சாலையில் விழுந்துள்ள மண் மற்றும் பாறைகளை அகற்றி, போக்குவரத்தை விரைந்து சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயணிகளுக்கான மாற்று பாதை

நிலச்சரிவு ஏற்பட்டுள்ள கெத்தை மலைப்பாதையை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, ஊட்டி - குன்னூர் அல்லது ஊட்டி - கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் - கோவை செல்லும் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அவசர உதவிகளுக்கு மாவட்ட பேரிடர் மேலாண்மை உதவி எண்ணான 1077-ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X