நீலகிரி: பெட்ரோல் கேன் வெடித்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு

ராகுல் என்ற இளைஞருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி: பெட்ரோல் கேன் வெடித்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே, கடந்த 15-ந்தேதி விநாயகர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றபோது, இசை வாத்தியக் குழுவைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாத்தியக் கருவிகளை சூடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பெட்ரோல் கேன் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவனேசன்(வயது 58) மற்றும் சஞ்சய் ஹரிஹரன்(வயது 19) ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ராகுல் என்ற இளைஞருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த இரண்டு பேரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com