நீலகிரி: மரத்தில் இருந்து பலாப்பழங்களை பறித்து சுவைக்கும் காட்டு யானை

கோத்தகிரி அருகே மரத்தில் காய்த்திருந்த பலாப்பழங்களை காட்டு யானை பறித்து சுவைத்தது.
நீலகிரி: மரத்தில் இருந்து பலாப்பழங்களை பறித்து சுவைக்கும் காட்டு யானை
Published on

கோத்தகிரி ,

கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பலா மரங்களில் தற்போது சீசன் காரணமாக பலாப் பழங்கள் காய்த்து குலுங்கி வருகின்றன. இவற்றை உண்பதற்காக சமவெளிப் பகுதிகளில் இருந்து ஆண்டு தோறும் காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்து முகாமிட்டு சீசன் முடிந்தவுடன் திரும்பிச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முள்ளூர் கிராமப் பகுதியில் ஆண் காட்டு யானை ஒன்று அங்குள்ள பலா மரத்தில் காய்த்திருந்த பழங்களை தனது காலை உயர்த்தி பறிக்க முயற்சி செய்தது. பழங்களை பறிக்க முடியாததால் தனது தோள்களால் மரத்தை இடித்து குலுக்கி பழங்களை கீழே விழச் செய்து சுவைத்து விட்டு சென்றது. இந்த காட்சியை அங்கிருந்த அங்கிருந்த இளைஞர்கள் சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com