

மதுரை:
மதுரையில் மின்வெட்டு பிரச்சினையை சரிசெய்யாமல், தன் மீது பழி சுமத்துவதாக முன்னாள் தி.மு.க. அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழக அரசியல் வரலாற்றிலேயே மிக மோசமான மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் என்று விமர்சித்தார். மதுரையில் நிலவி வரும் மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காணாமல், தன் மீது பழி சுமத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஐந்து கட்சிகள் மாறிய ஒருவருக்கு மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை போன்ற முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இது தவெக அரசின் நிர்வாகத் தோல்வியை வெளிப்படுத்துவதாகவும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.