இயக்குனர் பேரரசுக்கு விருது வழங்கினார் நித்தியானந்தா...!

ஆன்மீக பணியை பாராட்டி இயக்குனர் பேரரசுவுக்கு ’கைலாசா தர்ம ரட்சகர்’ விருதை நித்தியானந்தா வழங்கினார்.
இயக்குனர் பேரரசுக்கு விருது வழங்கினார் நித்தியானந்தா...!
Published on

சென்னை,

பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார்.

ஆனால் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார். அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றியும் வருகிறார்.

இந்த நிலையில், இயக்குனர் பேரரசுக்கு விருது வழங்கப்படுவதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார். இயக்குநர் பேரரசின் ஆன்மீக பணிக்காக கைலாசவிலிருந்து 'கைலாச தர்ம ரட்சகா' விருது வழங்கப்படும் என நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் இயக்குனர் பேரரசுக்கு ஆதரவாக என்றும் நானும், கைலாசமும் இருப்போம். அவரின் ஆன்மீக பணிகள் தொடர வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இது தொடர்பான டுவிட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com