சென்னையில் நிவர் புயல் : 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு - முழுப் பட்டியல்

சென்னையில் நிவர் புயல் காரண்மாக 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு செய்யபட்டு உள்ளது அதன் முழுப் பட்டியல் வருமாறு:-
சென்னையில் நிவர் புயல் : 77 இடங்களில் உணவு, நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு - முழுப் பட்டியல்
Published on

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது நிவர் புயலாக உருவாகியுள்ளது.

சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என்றும் அப்போது மணிக்கு 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும். மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நிவர் புயலை எதிர்கொள்ள மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நிவர் புயல் தாக்கினால் மேற்கெள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளர்.

நிவர் புயலை எதிர்கொள்ள கடலோர காவல்படை தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இரண்டு ஹெலிகாப்டர்கள், 4 கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. 15 பேரிடர் மேலாண்மை குழுக்களும் தயார் நிலையில் இருப்பதாக கடலோர காவல்படை தகவல் தெரிவித்து உள்ளது.

நிவர் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்துவருகிறது. புயல் கரையைக் கடக்கும்போது, சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்கு சென்னை மாநகராட்சி 2 உணவு சமைக்கும் முகாம்களையும் 77 நிவாரண மையங்களையும் அமைத்துள்ளது. சென்னையில் எந்தெந்த இடங்களில் புயல் நிவாரண மையங்களை அமைத்துள்ளது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

நிவர் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. அதனால், சென்னையில் மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கலாம் என்பதால், சென்னை மாநகராட்சி சென்னையில் உள்ள மொத்தம் 15 மண்டலங்களில் மக்கள் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஒவ்வொரு மண்டலத்திலும் 5 புயல் நிவாரண மையங்களை அமைக்க அறிவுறுத்தியது.

அதன்படி, சென்னையில் சமையல் செய்யும் இடங்கள் 2 மற்றும் 77 புயல் நிவாரண மையங்களை அமைத்துள்ளது. அருகில் உள்ள மக்கள் அந்த மையங்களுக்கு சென்று பாதுகாப்பாக தங்கிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

சென்னையில் எந்தெந்த இடங்களில் புயல் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்ற பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், நிவாரண மையங்கள் அமைந்துள்ள இடம் தொடர்புகொள்வதற்கான தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com