

சென்னை,
நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்து வருகிறது. புயலின் முன்பகுதி முழுவதுமாக கரையை கடந்த பிறகு, மையப்பகுதி விரைவில் கரையை கடக்க இருக்கிறது. புயல் காரணமாக புதுச்சேரி, கடலூர் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. பலத்த காற்று காரணமாக கடல் அலைகள் சுமார் ஆறு அடி உயரத்திற்கு மேலே எழும்பி ஆர்ப்பரித்து வருகின்றன.
கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக புதுச்சேரி, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.