

சென்னை,
நிவர் புயலால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக உயிர் சேதம் மட்டுமின்றி பொருட்சேதமும் ஏற்பட்டு இருக்கிறது. நிவர் புயல் மற்றும் மழை காரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட சேதங் களை கணக்கிட மத்திய உள்துறை இணைச்செயலாளர் அசுதோஷ் அக்னி கோத்ரி தலைமையில்7 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வந்தனர்.
இந்நிலையில் தமிழகம் வந்த மத்திய குழு நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து இன்று காலை புதுச்சேரி மற்றும் வேலூரில் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
அதனை தொடர்ந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு கடலூர் வரும் மத்திய குழுவினர் நிவர் புயலால் பாதிக்கப்ட்ட திருச்சோபுரம், பெரியப்பட்டு, பூவாணிக்குப்பம் ஆகிய பகுதிகளை பார்வையிட்ட ஆய்வு செய்கின்றனர். அதன் பின்னர் கடலூர் தனியார் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புயல் வெள்ள பாதிப்பு புகைப்படங்கள்,வீடியோக்களை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். பின்னர் வரகால்பட்டு, மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் பாதிப்புகளை பார்வையிட்டு பண்ருட்டி வழியாக விழுப்புரம் செல்கின்றனர்.