நிவர் புயல், கனமழை; வீடுகளில் புகுந்த 100 பாம்புகள்

சென்னையில் நிவர் புயல் மற்றும் கனமழையால் வீடுகளில் புகுந்த 100 பாம்புகள் வனத்துறையால் பிடித்து செல்லப்பட்டன.
நிவர் புயல், கனமழை; வீடுகளில் புகுந்த 100 பாம்புகள்
Published on

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட மழையால் குடியிருப்புகளில் பாம்புகள் புகுந்தால் உடனடியாக கிண்டி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் கிண்டி வனத்துறைக்கு தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், முடிச்சூர் போன்ற பகுதிகளில் இருந்து வீடுகளில் பாம்பு புகுந்துவிட்டதாக 123 அழைப்புகள் வந்தன.

இதையடுத்து கிண்டி வனத்துறையில் இருந்த பாம்பு பிடிக்கும் நபர்கள் சென்று பாம்புகளை லாவகமாக பிடித்தனர். இதில் நல்ல பாம்புகள், சாரை பாம்புகள், தண்ணீர் பாம்புகள், வில்லிகோல் வரையன் பாம்புகள், பச்ச பாம்புகள் உள்ளிட்ட 100 பாம்புகள் பிடிப்பட்டன. பிடிக்கப்பட்ட பாம்புகள் காப்பு காடுகளில் விடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com