விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கிய என்.எல்.சி. நிர்வாகம் - கிராம மக்கள் எதிர்ப்பால் பதற்றம்

விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளை என்.எல்.சி. நிர்வாகம் தொடங்கியுள்ளது.
விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கிய என்.எல்.சி. நிர்வாகம் - கிராம மக்கள் எதிர்ப்பால் பதற்றம்
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. ஏக்கருக்கு 6 லட்சம் ரூபாய் கொடுத்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலங்களை எடுக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சேத்தியாத்தோப்பு அருகே விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. சுமார் 35 ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் நிலங்கள் சமன்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதைபோல மேல் வளையமாதேவியில் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில் கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வளையமாதேவியில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் நெற்பயிர்கள் அறுவடை செய்ய இருக்கும் நிலையில் கால்வாய் வெட்டும் பணி தொடங்கியுள்ளது. நெற்பயிர்கள் அழிக்கப்படுவதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விளைநிலங்களை சமன்படுத்தும் இடத்திற்குள் மக்கள் நுழையாத வண்ணம், மாவட்ட காவல் காண்காணிப்பாளர் ராஜாராமன் தலைமையில் சுமார் 400 போலீசார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் கடலூரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com