

சென்னை,
தமிழக சட்டசபையில் இன்றைய நிகழ்வின்போது நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்றால் அது என்.எல்.சி நிறுவனம்தான். ஒரே இரவில் சி.எஸ்.ஆர்.-க்கு ஒரு சதவீதம் கொடுக்க வேண்டும்; அதை அந்த நிறுவனம் கொடுக்கிறதா? என்பதை பாருங்கள்... விளை நிலங்களை அழித்து, தண்ணீரையும் உறிஞ்சி எடுத்துவிட்டார்கள். ஆனால் அப்பகுதி மக்களுக்கு எதையும் செய்யவில்லை.
நிறுவனத்துக்காக நிலம் கொடுத்த மண்ணின்மைந்தர்களுக்கு நியாயமாக வேலை கொடுக்க வேண்டும். ஆனால் நுழைவுத்தேர்வு நடத்தி வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள். நுழைவுத்தேர்வு நடத்த இது என்ன மருத்துவ படிப்பா?. என்.எல்.சி. நிறுவனம் கொடுக்கும் எந்த தகவலுமே உண்மைக்கு புறம்பான தகவலாக தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
என்.எல்.சி. நிர்வாகம் குறித்து நிறைய பேர் கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகளுக்கு பிரச்சினை என்றால் முதல்-அமைச்சர் விஜய் விவசாயிகள் பக்கம் தான் நிற்பார்கள். என்.எல்.சி. நிறுவனம் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும் புகார்கள் தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதற்கான தகவல்கள் உங்களுக்கு (சவுமியா அன்புமணி) வரும். யாருக்கும் எதிராக நாங்கள் கண்டிப்பாக நடந்து கொள்ளமாட்டோம். விவசாயிகளுக்கும், மக்களுக்கும் எப்போது உறுதுணையாக இருப்போம். என்.எல்.சி. நிர்வாகம் மீது தவறு இருந்தால் உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
என்.எல்.சி. நிறுவனத்தால் விருத்தாசலத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கூட்டுக் குடிநீர் திட்டம் வேண்டும் என ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்; நீரில் கால்சியம் இருப்பதால் கிட்னி பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
அதுமட்டுமின்றி இதுவரை இழப்பீடு தொகை என்.எல்.சி. நிர்வாகத்தில் வழங்கப்படவில்லை. இன்றுவரை அப்பகுதி விவசாய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என்.எல்.சி. மூலம் எந்த தீர்வும் விருத்தாசலம் தொகுதி மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை என்றார். இவ்வாறு என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது.