எந்த கட்சியுடனும் உடன்பாடு கிடையாது - சீமான் பேட்டி

சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
எந்த கட்சியுடனும் உடன்பாடு கிடையாது - சீமான் பேட்டி
Published on

சென்னை,

ஈழ விடுதலை போராட்டத்தின்போது உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனின் 33-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை வளசரவாக்கம் சின்னபோரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் திலீபனின் உருவப்படத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:-

ஈழப்போர் நடந்து கொண்டிருந்தபோது அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? என அந்த செய்திகள் வெளியே போகவிடாமல் தடை நிகழ்த்தப்பட்டது. இங்கே உள்ள அரசியல் கட்சிகள்கூட தேர்தல் காலத்தில் ஈழம் ஒரு பிரச்சினை அல்ல. கிராமங்களில் எல்லாம் சென்றடையவில்லை என்று பேசினார்கள். எமது இனத்தை யார் அழித்தார்கள்? என்பது அனைவருக்கும் தெரியும். அதை வைத்து அரசியல் செய்கிறார்கள். எந்த காலத்திலும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளுடன் கட்சி உடன்பாடும் இல்லை, அரசியல் உடன்பாடும் இல்லை. சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com