ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம்

ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது.
ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம்
Published on

சென்னை,

கெரேனா ஊரடங்கால் கல்வி நிலையங்களை திறக்க தடை நீடிக்கிறது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்களை பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்தி வருகின்றன. இதற்கு தடை விதிக்கக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் கூறி வழக்கை முடித்து வைத்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com