பாஜகவுடன் கூட்டணிக்காக விஜய் மீது வழக்குப் பதியவில்லை: சீமான்


பாஜகவுடன் கூட்டணிக்காக விஜய் மீது வழக்குப் பதியவில்லை: சீமான்
x

பாஜகவுடன் கூட்டணிக்காக விஜய் மீது வழக்குப் பதியவில்லை என்று சீமான் கூறினார்.

நெல்லை,

கரூர் நெரிசல் சம்பவத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய த.வெ.க. தலைவர் விஜய், அவர்களது குடும்பத்துக்கு ரூ.1.85 கோடி நிதி உதவி வழங்கினார். மேலும் உங்கள் குடும்பத்தில் நானும் ஒருவன் என்று உருக்கமாக கூறினார்.

இந்த நிலையில், இதுகுறித்து நெல்லையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கரூரில் 41 பேர் உயிரிழந்த குற்றத்திற்கு முதன்மை காரணம் விஜய்தான். தவறு இல்லை என்றால் ஏன் முன்ஜாமீன் கேட்கிறார்கள்?. குற்றத்திற்கு காரணமான வரையே சிபிஐ விசாரிக்காது எனில் பிறகு எப்படி நியாயம் வெளிவரும்?. யாரைப் பார்க்க கூட்டம் கூடியதோ அந்த நபர் மீது சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு செய்யாதது ஏன்?.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணையில் இருக்கும்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் தனிமையில் சந்தித்து பேசியது ஏன்?. ரூ.20 லட்சம் பணம் கொடுத்துவிட்டு நேரில் சந்தித்து பேசினால் உண்மை எப்படி வெளியே வரும்.

கூட்டணியில் சேர்ப்பதற்காகத்தான் ஆதவ் அர்ஜுனா, விஜய் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. பாஜகவுடனான கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றால் அவர் மீது வழக்குப்பதிவு செய்வார்கள். சிபிஐக்கு மாற்றியதும் முன்ஜாமீன் மனுவை ஆனந்த் திரும்பப் பெறுகிறார் எனில் சிபிஐ காப்பாற்றதானே செய்கிறது?. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story