தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை; திருமாவளவன்

தவெக எம்எல்ஏக்கள் அந்த அளவுக்கு பலவீனமாக இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன் என திருமாவளவன் கூறினார்.
திருமாவளவன்
திருமாவளவன்
Published on: 

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது;

தவெக ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடக்கிறதா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்று நான் கருதுகிறேன். ஆதரவு நல்கி வருகிற கூட்டணிக் கட்சிகள் தவெகவுக்கு வழங்கி வரும் ஆதரவை திரும்பப் பெறப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடது சாரிகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை தங்களது ஆதரவைத் திரும்பப் பெறும் வாய்ப்பில்லை என்றபோது, ஆட்சியைக் கவிழ்க்கவும் வாய்ப்பில்லை என நான் பெரிதும் நம்புகிறே

வேறு எந்த வழியில் அவர்கள் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. தவெக எம்எல்ஏக்களை வைத்தே ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி நடக்கிறதா? என்று கேட்கிறீர்கள். தவெக எம்எல்ஏக்கள் அந்த அளவுக்கு பலவீனமாக இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

தவெக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க இப்போதும் ஸ்டாலினும், உதயநிதியும் முயற்சிக்கிறார்கள். அதனால் தான், இந்த ஆட்சி இத்தனை மாதங்கள்தான் இருக்கும் எனச் சொல்லி வருகிறார்கள். பாஜக ஆதரவுடன் அதிமுக - திமுக இணைந்து ஆட்சியமைக்கும் முயற்சி இப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது,” என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்து இருந்தார். தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவும், அதிமுக பிரமுகர் ஒருவர் தன்னிடம் 15 கோடி தருவதாக பேசினார் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

X