

சென்னை,
பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையில் 2-வது நாளாக இன்றும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையான ரூ.73.29 -க்கே விற்பனையாகிறது. டீசல் விலை ரூ.68.14 ஆக விற்பனையாகிறது.