செஞ்சி சிறுமி குறித்து 21 நாட்களாக எந்த துப்பும் கிடைக்கவில்லை; சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறல்

சிறுமி மாயமானது குறித்து உள்ளூர் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தியபோதிலும் எந்தவித துப்பும் துலங்காததால் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது
சி.பி.சி.ஐ.டி. போலீசார்
சி.பி.சி.ஐ.டி. போலீசார்
Published on: 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு- பவானி தம்பதியினரின் 7 வயது மகள் ஹேமலதா என்ற ஹேமாவதி. கடந்த 11-ந் தேதி மாலையில் தனது பிறந்த நாளை கொண்டாடி முடித்து விட்டு பெற்றோருடன் படுத்து தூங்கினாள். மறுநாள் அதிகாலை வேளையில் அவள் திடீரென காணவில்லை.

சிறுமி மாயமானது குறித்து உள்ளூர் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தியபோதிலும் எந்தவித துப்பும் துலங்காததால் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார், இந்த வழக்கை கையில் எடுத்து இன்றுடன் 11 நாட்கள் ஆகிறது. சிறுமி மாயமாகி 21 நாட்கள் நிறைவடைந்து விட்டது. இருப்பினும் இதுநாள் வரையிலும் சிறுமியை பற்றி எந்தவித தடயமும் சிக்கவில்லை.

சிபிசிஐடி போலீசார், சிறுமியின் தாயார் மற்றும் தந்தையிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அதேபோல, சிறுமியின் உறவினர்கள், கிராம மக்கள் என பலரையும் போலீசார் தனித்தனியாக வரவழைத்து அவர்களிடமும் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அருகில் விசிக்கும் நபர்கள், குற்ற செயல்களில் தொடர்புடையவர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்திய நிலையிலும் எந்த துப்பும் இதுவரை கிடைக்கவில்லை. இதனால், செஞ்சி சிறுமிக்கு என்ன ஆனது என்ற மர்மம் 21 வது நாளாக நீடிக்கிறது.

X