ஜெம் வீரமணிக்கும், திமுகவுக்கும் சம்பந்தமில்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் நேரடியாக குதிரை பேரம் நடந்துள்ளதாக ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெம் வீரமணிக்கும், திமுகவுக்கும் சம்பந்தமில்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி
Published on

சென்னை,

அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது.

”திமுக ஆட்சியில் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் திமுக மீது தவெக அரசு வீண் பழியை சுமத்துகிறது. ஜெம்வீரமணி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். பின்னர் எப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜெம் வீரமணி வழக்கில் புதிய ஆதாரங்கள், சாட்சிகள் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுப்பதற்காக காத்திருந்தோம். வீடியோ காட்சிகள் தெளிவாக இல்லை. அதனால் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. வழக்கை கைவிடுவதாக சொல்லவில்லை.

ஜெம் வீரமணிக்கும், திமுகவுக்கு சம்பந்தம் இல்லை. போக்சோ வழக்கு என்பதால் எந்த தகவலையும் கசிய விடக்கூடாது. இந்த வழக்கில் யார் தொடர்புடையவராக இருந்தாலும் சட்டத்தில் முன்நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் நேரடியாக குதிரை பேரம் நடந்துள்ளது. பொய் செல்லியே ஆட்சியை ஓட்டிவிடலாம் என தப்புக்கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். எது, உண்மை, எது பொய் என தெரியாமல் மக்களை குழப்பத்தில் வைத்துள்ளது தவெக அரசு. ராஜினாமா செய்து தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களால் மக்களை சந்திக்க முடியவில்லை.

தமிழ்நாட்டை பின்னோக்கி இழுத்துச்செல்லும் நிலையை தவெக அரசு உருவாக்கி உள்ளது. மக்கள் மீது தாங்க முடியாக சுமையை தவெக அரசு ஏற்படுத்தி உள்ளது. இவர்களை ஏன் ஆட்சியில் அமர வைத்தோம் என்ற வேதனையில் தமிழக மக்கள் உள்ளனர். தமிழகத்தில் ரீல்ஸ் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இந்த ரீல்ஸ் ஆட்சியை மக்கள் விரட்டியடிக்க காத்திருக்கிறார்கள்.”

இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com