தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையில் ஊழல் இல்லை - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையில் முறைகேடு என பா.ஜ.க. தமிழக தலைவர் முருகன் கூறிய குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி மறுத்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையில் ஊழல் இல்லை - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பா.ஜ.க. தமிழக தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டினார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், காமராஜரால் உருவாக்கப்பட்ட சென்னை காமராஜர் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை, மும்பையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், இது குறித்து வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என தமிழக பா.ஜ.க. தலைவர் பேசியுள்ளார் என்று அவர் விமர்சித்துள்ளார். பெருந்தலைவரின் வழியில் இதய சுத்தியோடு, ஏழைகளுக்காக, நேர்மையாக பணியாற்றுகிறது அறக்கட்டளை என்றும் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com