"மகப்பேறு விடுப்பு வழங்கும் போது எந்த பாகுபாடும் காட்ட கூடாது" - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

மகப்பேறு விடுப்பு வழங்கும் போது எந்த பாகுபாடும் காட்ட கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
"மகப்பேறு விடுப்பு வழங்கும் போது எந்த பாகுபாடும் காட்ட கூடாது" - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
Published on

சென்னை,

தமிழகத்தில் மணமான பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, 180 நாட்களிலிருந்து 270 நாட்களாக அதிகரித்து, 2016ஆம் ஆண்டு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசாணை பிறப்பித்தது. இந்த சலுகை, பணி வரன்முறைப்படுத்தப்படாத, தற்காலிக பணியாளர்களுக்கும் நீட்டித்து 2020ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த அரசாணைகள் அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜகுரு, உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி கிருபாகரன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மகப்பேறு விடுப்பு வழங்குவதில் வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப் படுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையே பாகுபாடு காட்ட கூடாது. மகப்பேறு விடுப்பு வழங்கும் போது எந்த பாகுபாடும் காட்ட கூடாது எனவும் அனைவருக்கும் ஒரேமாதிரியாக மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com