

சென்னை
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் விஜயபாஸ்கர் அவரது மனைவி ரம்யா மீது வருமானத்தை விட அதிக அளவில் சொத்து சேர்த்ததாக முதல்கட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜயபாஸ்கர் வீடு உள்பட 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை நேற்று இரவு முடிந்தது. இந்த சோதனையில் ரூ.23.85 லட்சம் ரொக்கப்பணம், 4.87 கிலோ தங்க நகைகள் மற்றும் 136 கனரக வாகனங்களின் ஆவணங்கள், 19 கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகள், வழக்கிற்கு தேவையான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து கணக்கீடு செய்யும் பணி தொடங்கியது
இந்நிலையில், இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு முழுவதுமாக ஒத்துழைப்பு வழங்கினேன். இந்த சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை. இந்த வழக்கை நான் சட்டப்படி எதிர்கொள்வேன் என்று கூறினார்.