

தென்காசி.
தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், குற்றாலத்தில் விரைவில் குளுகுளு சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிக்கரைகளில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றது. இதில் பழைய குற்றால அருவிக்கரையில் மேம்பாட்டு பணிகள் நிறைவு பெற்றது. நிறைவுற்ற பணிகளை சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் நேற்று தொடங்கி வைத்தார்.
.தற்போது பழைய குற்றால அருவியில் தண்ணீர் மிகவும் குறைவான அளவே விழுகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத நிலை உள்ளது. இதற்கிடையே பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தலா ரூ.20 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த கட்டணம் வசூலிக்கும் முறை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும், அருவியில் தண்ணீர் விழும்போது பழைய நடைமுறைப்படியே கட்டணமின்றி சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.